திங்கள், 15 டிசம்பர், 2008

வாரணம் ஆயிரம்


நண்பர்களின் அச்சுறுத்தல்களை மீறி இப்படத்தை நேற்று பார்த்தேன். நிறைகளை விட குறைகள் இருக்கத் தான் செய்தது. ஆனால் முற்றிலும் வெறுக்கத் தக்க வகையைச் சார்ந்தது அல்ல ‘வாரணம் ஆயிரம்’ பொதுவாக படம் பார்த்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழிதோறும் படத்தின் ஏதோ ஒரு அம்சம் நம் மனதை இம்சை செய்யும், அது இசையாகவோ ஏதோ ஒரு காட்சியாகவோ, நகைச்சுவையாகவோ இருக்கலாம். அது போதும் ஒரு திரைப்படம் நம் மனதில் பதிந்து வெற்றி பெற. அதன் பின் தான் நம் உன்னத மூளைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்...காமிரா கோணங்களை (காமெரா பற்றிய எவ்வித அறிவும் பரிச்சயமும் இல்லாமல்) விமர்ச்சிக்கும்..இசையை copy cat kill the rat என்று நையாண்டி செய்யும். எதற்கு இரு வேடத்தில் சூர்யா என்று தன் தனிப்பட்ட கருத்தை விமர்சனமாக முன் வைக்கும். கெட்ட கெட்ட வார்த்தைகளால் அடுத்தவரின் திறமைகளை வயிற்றெரிச்சலாக திட்ட வைக்கும். எல்லாம் செய்யும், இந்த மனம், ஏனென்றால் அதுதான் கெளதம் வாசுதேவ் மேனன் அல்லவே!

எனக்குக் கிடைக்கும் சின்ன ப்ரேக் சாப்பிடும் நேரம். ஸ்பூனில் சாப்பிட்டுக் கொண்டே, ஹெட்போனிலோ, மொபைலிலோ பாடல் கேட்டவாறே, சிஸ்டமில் எதாவது டைப் செய்வேன் (இந்தப் பதிவாகக் கூட இருக்கலாம்)...இதற்கிடையே சாப்பாடு அலர்ந்து போகும், மறுபடி ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, சாட்டில் வந்து குதித்த நண்பனுக்கு ஹாய் சொல்வேன்... நேரத்தை உருவாக்க வேறு வழி தெரியாமல் நான் செய்வது இது. யாரையும் பாதிக்காது. ‘வாரணம் ஆயிரத்தில்’ இயக்குனர் இப்படிப்பட்ட சிக்கலில் தான் மாட்டியுள்ளார். தந்தை மகன் பாசம், முதல் காதல், இரண்டாம் காதல், இடையில் நாட்டுப்பற்று ...என பலவிதமான கதைகளை ஒரே கதையில் சொல்ல முயற்சித்திருப்பது அவரை மட்டும் பாதிக்காமல் பார்ப்பவர்களை எரிச்சல் அடையச் செய்துவிட்டது. Characterization லில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். ஆகச் சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய படம் பார்வையாளனின் சிதறப்பட்ட கவனத்தால் வெகு சாதாரண படமாகிவிட்டது.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்...எனக்குப் இந்தப் படம் பிடித்திருக்கிறது. இது ஒரு emotional play…காதல், போர், தோல்வி, மரணம் என்று வாழ்க்கையின் முக்கிய கூறிகளை மேம்போக்காக மட்டுமே சொல்லிவிட்டது. Single platformல் திரைக்கதை பயணித்திருந்தால் சுகமான பயணமாக இருந்திருக்கும். ஆனால் எப்போதும் சுகமாகத் தான் பயணங்கள் இருக்க வேண்டுமா என்ன? ஒரு திரைப்படமாக குறைகள் இருந்தாலும் மெல்லிய நினைவுகளை தட்டியெழுப்பச் செய்தது. மனதை லேசாக அதிரச் செய்தது. தோழி தாமரையின் வரிகள் காற்றெல்லாம் கலந்த போது மகிழ்ச்சியில் மனம் நனைந்தது. “நெஞ்சுக்குள் பெய்த மாமழை...நீண்ட நாள்களாக மனதில் தேங்கி இன்னும் வெளியேறாத பாடலாயிற்று.

நமக்கெல்லாம் நிறைய சினிமா பார்த்து பார்த்து நல்ல சினிமா எதுவென்று விளங்கிவிட்டது. நம் இயக்குனர்கள் விழிப்படைந்து செயல்பட்டால் நலம்.

20 கருத்துரைகள்:

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

"Me the first"

சுமாரான படம் தான்.

தமிழில் 10க்கு 8 படம் சப்பையாதான் வருது.

ஒரு தாக்கத்தையும் காணோம்..

சர்தேவச திரைப்பட விழா 17 முதல் சென்னையில் ..

அனுமதி சீட்டு எடுத்த்தாச்சு. மொத்தம் 120 படங்கள்

நிச்சயம் பத்தாவது பார்க்க வேண்டும் என்று ஆவல்.

உமாஷக்தி சொன்னது…

thanks for your comment and info..நானும் அனுமதிச் சீட்டு வாங்கிடறேன்..

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.

வரும் டிசம்பர் 17 முதல் 27வரை.

சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.


வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்

10 நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ500/- மட்டுமே..

for more info plz visit:

http://www.chennaifilmfest.org

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

வாரணம் ஆயிரத்தில்’ இயக்குனர் இப்படிப்பட்ட சிக்கலில் தான் மாட்டியுள்ளார்.//

இதுபோன்று வித்யாசமாய் இதுவரை ஒருவரின் விமர்சனமும் படித்ததில்லை. நல்லா விமர்சிக்கறீங்க.

உமாஷக்தி சொன்னது…

நன்றி அமித்து அம்மா..அ.வெண்ணிலாவின் கவிதைகள் New Booklands ல் கிடைக்கிறது. ph- 28156006. விகடனில் வெளிவந்திருக்கும் கவிதையை வாசித்து பாராட்டியதற்கு நன்றி அமித்து அம்மா..words from friends keeps me going...thanks a ton...

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

இது மட்டுமல்ல உமா. அடுத்து புத்தக கண்காட்சி வேறு வந்து விடும்..

இதுக்கு டிக்கெட் எடுத்ததிற்கே அம்மணியிடம் செம பாட்டு..

எவ்வளவு அடிச்சாலும் தாங்றேன்.. அவ்வ்வ்

உமாஷக்தி சொன்னது…

வண்ணத்துப்பூச்சியார் மிக்க நன்றி...உங்களுக்கு ஒன்று தெரியுமா புத்தகக் கண்காட்சிக்கு கடந்த 13 வருடங்கள் தொடர்ந்து சென்றுள்ளேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் என் குழந்தைக்கு (நவம்பர் மாதம் பிறந்தான்) இரண்டு மாதம் தான் ஆயிருந்தது. அச்சமயம் ஹாஸ்பிடல் தவிர நான் சென்ற ஒரே இடம் புத்தகக் கண்காட்சி தான்....Film Festivalவலும் என் மனதிற்கு மிக நெருக்கமான விழா. என் அலுவலகத்தில் International Film Festival Coordinator நான் தான். சென்ற ஆண்டு பாஸ் கிடைத்தும் போக இயலவில்லை...இந்த வருடம் கட்டாயம் போக வேண்டும். உங்கள் தகவலுக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி வண்ணத்துப்பூச்சியார். உங்களைக் கூட நான் இவ்விரு இடங்களில் சந்திருத்திருக்கலாம்....அம்மிணியையும் அழைச்சிட்டு போங்களேன்...திட்டுக் குறையும் (நீங்கள் மெய்மறந்த சம்யங்களில் திட்டு ஏறினாலும் ஏறும்)

சாணக்கியன் சொன்னது…

இந்தவார விகடனில் ‘உமாசக்தி’ என்ற பெயரில் கவிதை வெளியாகியுள்ளதே, அது நீங்கள்தானா? ஆம், எனில் வாழ்த்துகள்.

படத்தில் குறைகள் இருப்பினும் ஒரு பார்க்கத்தக்க படம் என்பது நியாயமான விமர்சனம். அவ்வாறு இல்லாமல் பலரும், குப்பை,கால விரயம், ஆங்கில வசனங்கள் அதிகம், கௌதம் படம் போல் இல்லை, ரம்யா குண்டு, சிம்ரன் கதா நாயகியாக நடித்திருக்காலாம் என்று குறையை மட்டுமே கூறியதால் நான் இந்தப் பதிவை எழுதவேண்டியதாயிற்று. http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

தாமரையின் கவிதைகளில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை கேட்டுள்ளேன் இங்கே,http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html.
கட்டாயம் நீங்கள் வந்து விளக்கம் சொல்லவேண்டும் :-). நன்றி,மீண்டும் வருவேன்.

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

நானும் 15 வருடங்களாக புத்தக கண்காட்சி கண்டு கன்னாபின்னா என்று வாங்கி 3 டிரங்கு பெட்டி நிறைய வைக்க இடம் இல்லாமல் பரண் மேல் அடிக்கியாச்சு.

நிச்சயம் சந்திச்சு இருப்போம்.

அம்மணி Very busy with Tutions.

No Time ன்னு சொல்றா. ஆனா இரானிய படம் கண்டிப்பாக பார்கணுமாம்.

முடிந்தால் எல்லோரும் சேர்ந்து பார்க்கலாம்.

சூர்யா
butterflysurya@gmail.com

உமாஷக்தி சொன்னது…

ஆம். நான் தான். வாழ்த்துக்கு நன்றி சாணக்யா. உங்கள் விமர்சனம் படித்தேன். விரிவாகவும் நன்றாக இருந்தது. தாமரையின் வரிகள் ஆழமானவை. எளிமையான வார்த்தைகளுக்குள் கனமான விஷயங்கள் பொதிந்திருக்கும்...'பூ' பார்த்துவிட்டீர்களா?

சாணக்கியன் சொன்னது…

வண்ணத்துப் பூச்சியார், இந்தப் படத்தில் உங்களுக்கு ரசிக்கும் படியான காட்சிகள் ஏதும் இல்லையா?
சமீரா ரெட்டி தன் காதலை சூர்யாவிடம் சொன்னவுடன் அங்கு சூர்யாவின் ரியாக்சன் எப்படி? வழக்கமான தமிழ் சினிமா போல உடனே ஓடிப்போய் கட்டிக் கொள்ளாமல், சந்தோசத்தில் கண்கலங்காமல், அப்போது சமீராவிடம் இருந்து விலகிச்செல்கிறாரே, சிறு புன்னகையோடு தான் நினைத்ததை அடைந்துவிட்ட பெருமித உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறாரே, அதைக்கூட ரசிக்க முடியவில்லையென்றால் நீங்கள் சர்வதேச திரைப்பட விழாவிற்கு போய் என்ன பயன் என்று சீரியஸாகவே விளங்கவில்லை !

உமாஷக்தி சொன்னது…

சாணக்யாவிற்கும் எனக்கும் இந்தப் படம் பிடித்துவிட்டது. வண்ணத்துப்பூச்சியாருக்கு விருப்பம் இல்லையெனில் விட்டுவிடலாமே...ரசனைகள் மாறுபடும் அல்லவா நண்பரே?

முகில் சொன்னது…

நமக்கெல்லாம் நிறைய சினிமா பார்த்து பார்த்து நல்ல சினிமா எதுவென்று விளங்கிவிட்டது. நம் இயக்குனர்கள் விழிப்படைந்து செயல்பட்டால் நலம்.

;)

(அதிக கமெண்ட்ஸ் வேண்டுமென்பதற்காக, ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் கீழே தாங்களே எசகமெண்ட்ஸ் போடுவதை உண்மையாகக் கண்டிக்கிறேன்.)

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

No comments for Nonsense.

நன்றி உமா.

உமாஷக்தி சொன்னது…

நன்றி முகில்...என்னது எசகமெண்ட்ஸா அப்படின்னா என்ன் து? என் பையன் சக்திவேலிடம் நான் அடிக்கடி கேட்பது - வடிவேல் எப்படிம்மா கத்துவார்? ஆவ்வ்வ்வ்வ் என்று அதே மாதிரி சவுண்ட் கொடுப்பான்..அதே தான் உங்களுக்கும் இப்ப.

கே.ரவிஷங்கர் சொன்னது…

உமாஷக்தி,

படத்தில் உள்ள முக்கிய குறை அப்பா மகன் உறவு அழுத்தமாக மனதில் பதியவில்லை.

அவனுடைய காதலிக்கு மேனகெடுகிற மாதிரி அப்பாவுக்கு இல்லை.

புதுமனை புது விழா முடிந்து நால்வரும் வீட்டு ஹாலில் படி மீது தலை வைத்து "அக்கடா" என்று ரிலாக்ஸ் செய்வது யதார்த்தம். period படம் என்பதால் இவர் புற காட்சி கவனம் (சீன் செட்டு) அதிகமாகி காட்சிகளின் அழுத்தம் குறைந்து விட்டது.

நெறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.


இசை? என்னை பொறுத்த வரை இசை ராஜாவோடு முடிந்து விட்டது. எல்லாம் ஒரு காட்டு காட்டிவிட்டு போய்விட்டார்.

சாணக்கியன் சொன்னது…

/*ரசனைகள் மாறுபடும் அல்லவா நண்பரே?*/

உண்மைதான். அதே சமயம் ‘சப்பை’ என்றெல்லாம் ஒரேயடியாக மட்டம் தட்டும்போது எரிச்சல் வருகிறது. அப்படி வன்முறையில் (:-)) ஈடுபடும்போது நாமும் அவர்களை வம்புக்கிழுத்தால் தவறில்லை என்றே எண்ணம் வலுக்கிறது. ஆனால் அதற்கு இது சரியான இடமில்லை. அது என் தளத்திலோ வண்ணத்தார் தளத்திலோ நடக்கவேண்டும். எப்படியோ, வண்ணத்துப் பூச்சியார் கோவிக்கவில்லை.

’பூ’ இன்னும் பார்க்கவில்லை உமா. பொம்மலாட்டம் பார்த்துவிட்டேன்.
http://vurathasindanai.blogspot.com/2008/12/37100.html

அகநாழிகை சொன்னது…

உமா, நலம்தானே..
வாரணம் ஆயிரம் பற்றிய உங்கள் கருத்துக்களை படித்தேன். மன நெகிழ்வை குறி வைத்து காட்சியமைக்கப்படுவது வழக்கமாக ஒன்றுதான். அதில் சிலாகித்து இப்படி எழுதி இருக்கீர்கள். இசை, பாடல் காட்சிப் படுத்திய விதம், கதை, கதா பாத்திரம் என ரசிகனை ஏதாவது ஒன்று படங்களில் ஈர்க்கத்தான் செய்கிறது. படைப்பை விமர்சன ரீதியாக பார்ப்பவர்கள் கண்களில் குறைகள்தான் முதலில் உறுத்துகிறது. படத்தை பார்த்து வெறுமனே ரசித்து விட்டுபோகிறவர்கள் எதைப்பற்றியும் கவலைபடுவதில்லை. அவர்கள் கருத்து "நல்லாயிருக்கு, நல்லாயில்ல அல்லது ஓடும் ஓடாது" என்பதாகத்தான் அவர்கள் விமர்சனம் அமையும். நம் மனம் கெளதம் வாசுதேவ் மேனனாக இல்லாததற்காக அவர் செய்ததெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. நான் உங்களிடம் நல்ல கவிதையை எதிர்பார்த்து அனுகுகிறேன் என்றால் அது உங்கள் கவிதா திறன் மீது உள்ள நம்பிக்கை. அது போலதான், (கெளதம் மனமாக இல்லாமல் ) உங்கள் மனத்தால் நீங்கள் படத்தை விமர்சித்ததால் படம் நன்றாக இருக்கிறது என்று ஆரம்பித்து சாதரண படமாகிவிட்டது என்று முடித்துள்ளீர்கள். மற்றபடி பாடல்கள் எல்லோருக்குமே பிடித்துதான் சொல்லவே தேவை இல்லை. (அது நகலாக இருந்தாலும்) நாம் சுட்டுவது என்னவென்றால்... திறன் கொண்டவர் என கருத்துடன் படத்துக்கு சென்றால் அங்கே கிடைப்பது ஏமாற்றம்தான். நண்பர்கள் எச்சரிக்கையுடன் படத்தை நீங்கள் முன் முடிவோடு பார்க்கசென்றதாக குறிப்பிட்டிருந்தீர்கள். படத்தில் ஒட்டாதா விஷயம் நிறைய... அமெரிக்கா போவது, ஆர்மியில் சேர்வது, குழந்தையை காப்பாற்றுவது எல்லாமே போலியான வாழ்கையின் பிரதிபலிப்பாகவே இருந்தது, முக்கியமான ஒன்று மகனை இவ்வளவு சுதந்திரத்துடன் வளர்ப்பதாக காட்சிப்படுத்தும் கெளதம் சூர்யாவின் மகள் கதாபாத்திரத்தை எப்படி சித்தரித்துள்ளார் என்பதை யோசித்தீர்களா..? படத்தின் பாடல்கள் நகல் என்பதை விட அந்த நகலெடுக்கும் விஷயம் கௌதமுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்... வேறு அசல் பாடலை தருவது அவ்வளவு கடினமான விஷயமா என்ன..?
அதே போல கேமரா பற்றிய அறிவோடுதான் கோணத்தை பற்றி விமர்சிக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் நகைப்புக்குரியது. இயக்குனர் காட்சிக்கான களத்தை சொல்கிறார். அப்போது ஒளிப்பதிவாளர் அல்லது இயக்குனர் இருவரில் யார் கோணத்தை தீர்மானிப்பது...? திரைப்படம் தனி ஒருவரின் திறன் அல்ல.. அது கூட்டு முயற்சி என்பது நமக்கு தெரிந்ததுதானே..? கெளதம் தன் திறனை முழுவதுமாக உபயோகித்து எந்த வணிக கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் படம் எடுக்கட்டும். அப்போது அவரை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி ரவி..எனக்கும் எப்போதும் ராஜா தான் பிடிக்கும்..'அனல் மேல் பனித்துளி கேட்டுப் பாருங்கள் மிக அருமை...சுதாவின் குரலில் இரவின் தனிமையில் அப்பாடல் எழுப்பும் மன அலைகள் அதிகம்.

உமாஷக்தி சொன்னது…

அகநாழிகை உங்கள் ஆழமான பார்வை புரிகிறது..சில சமய்ம் நம் குழந்தைகள் தவறு செய்தால் நாம் கண்டு கொள்வதில்லை...அது போல இப்படத்தை நான் அதிகம் அலசி ஆராய ஏனோ மனத் தடைகள்..படம் பிடித்தது...உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி