ஞாயிறு காலை சத்யம் தியேட்டர் வளாகத்திற்கு சரியாக ஒன்பது மணிக்கு வந்துடுங்க என்று தொலைபேசியில் அழைத்த குரலை கேட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலிருக்கும்.
பேசியது இயக்குநர் வசந்தபாலன். அவர் இத்தனை நாள்கள் கழித்து அழைத்தது ஆச்சரியமாக இருந்தது. சில காரணங்களுக்காய் அதிகம் பிடித்தவர்களை நான் தேவையற்று நெருங்குவதில்லை. பாலன் அத்தகையவர். அவருடனான முதல் சந்திப்பு புத்தகக் கண்காட்சியில். அப்போது வெயில் வெளிவந்திருந்த நேரம். நானே போய் பேசினேன். வெயிலைப் பற்றி பாராட்டினேன். கூச்சப்படும் இயல்பினர் போலும். குறைவாய் பேசிவிட்டு வாங்கிய புத்தகங்களைப் பற்றி கதைத்துவிட்டுக் நொடியில் காணாமல் போனார்.
அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து ‘காலம்’ (கனடா) பத்திரிகைக்காக அவரை நேர்காணல் செய்தேன். வசந்தபாலன் தெளிவாகவும் தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாகவும் நிறைவாகவும் பேசினார். வெயில் படத்தின் வன்முறைப் பற்றி கேட்டேன், எங்கள் ஊர் வெக்கையும் வன்முறையும் நிறைந்த வாழ்விடம், வாழ்தலுக்காக நடக்கும் வன்முறைகள், பணத்திற்காக, பதவிக்காக எனவும் பிரித்தெடுக்க முடியாத வன்முறை அது என்றார். அதன்பின் நிறைய கதைத்தோம் இலக்கியம், சினிமா என இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. என்னுடைய டிக்டோஃபோன் அவருடைய தன்மையான குரலினால் நிரம்பிய தினமது. ஏதோ சில காரணங்களுக்காய் அந்த நேர்காணலை அச்சேற்ற முடியவில்லை. அதன்பின் வசந்தபாலன் எனும் அருமையான மனிதர் நினைவுத் திரையில் மங்கலாகிப் போனார். சனிக்கிழமை இரவு அவர் அழைத்ததும் அவர்தான் அழைக்கிறாரா என்பதே குழப்பமாக இருந்தது. நீங்கதானா என்றேன் தயக்கமாக. ஆமாங்க காலைல வந்துடுங்க என்றார்.
நிகழ்ச்சியை சாந்தம் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டாம் தளம் வரை வெள்ளை மற்றும் நீல வண்ண பலூன்கள் கொத்து கொத்தாய் ஆங்காங்கே அழகாய் கட்டி வைத்திருந்தார்கள் – படத்தின் ஏதோ ஒரு காட்சியில் அவை இடம்பெறும் என அனுமானித்தேன். தயாரிப்பாளர்களான கருணாகரனும் அருண் பாண்டியனும் (அயங்கரன்) மற்றும் வசந்தபாலனும் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை இயல்பின் தன்மை மாறாமல் ஒருங்கிணைத்து நடத்தினார். மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள். இசையமைப்பு விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.ப்ரகாஷ். பாடலாசிரியர் நா.முத்துகுமார். அதில் இரண்டு பாடல்கள் எனக்கு கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது. சில பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும். சில உடனே நம் உதட்டுக்குள் ஒட்டிக் கொள்ளும். படம் வெளியானதும் நம் அத்தனை பேரின் உதடுகளும் உச்சரிக்கப் போகும் பாடல் “அவள் அப்படி ஒன்றும் அழகல்ல’ அருமையான வரிகள். அழகைப் பற்றிய நம் மதீப்பீடுகள் அத்தனையையும் தரைமட்டமாக்கிவிடும் சொற்கள். அந்த பாடல் வரிகளில் சில; (பாடியவர்கள் ரஞ்சித், வினீத், ஸ்ரீநிவாஸ் & ஜானகி ஐயர்) இசை விஜய் ஆண்டனி.
பல்லவி – 1
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஓர் குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
பல்லவி – 2
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிர்ம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
பாலாஜி சக்திவேல், அமீர், சசி,சசிகுமார், ஸ்டேன்லி, சசீந்திரன், என்று தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படுத்திய முக்கிய இயக்குநர்களையும் மேடையில் அமர வைத்திருந்தது அழகு. பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், மனுஷ்யபுத்ரன், ஜெயமோகன் மற்றும் பலர் பேசினார்கள்.

சிடியை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட அதை பெற்றுக் கொண்டது அறிமுக நடிகர் மகேஷின் தந்தை. அவர் தியேட்டரில் ஒன்றில் பணிபுரியும் சாதாரண ஊழியர். அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் அதுதான். விளிம்புநிலை மனிதர்களை திரையாக்கப் படுத்தியதும் அல்லாமல் தன்னால் இயன்ற வரை தன்னுடைய படைப்புக்கு நேர்மையாக இருக்கும் ஒரு மனிதரைக் காண முடிவதே அதிசயம். வசந்தபாலன் நிகழ்த்திக் காட்டிய இவை அவரின் மேல் நான் கொண்ட மதிப்பை பன்மடங்கு உயரச் செய்தது.
நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியில் வந்தேன். 12 மணி வெயில் கொளுத்தித் தள்ளியது. ஆனால் ஏனோ அது அவ்வளவாக உறைக்கவில்லை.
நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியில் வந்தேன். 12 மணி வெயில் கொளுத்தித் தள்ளியது. ஆனால் ஏனோ அது அவ்வளவாக உறைக்கவில்லை.
24 கருத்துரைகள்:
பகிர்வுக்கு நன்றி
அழகான பாடல் வரிகள்.
கேட்கத்தூண்டுகிறது.
விளிம்புநிலை மனிதர்களை திரையாக்கப் படுத்தியதும் அல்லாமல் தன்னால் இயன்ற வரை தன்னுடைய படைப்புக்கு நேர்மையாக இருக்கும் ஒரு மனிதரைக் காண முடிவதே அதிசயம். //
சினிமாவில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களா?????
ஆச்சரியமாத்தான் இருக்கு.
நீங்கள் சொன்னதுபோல் பாடல் வரிகள் மிக அழகு. நிச்சயம் எல்லோரும் முனுமுனுக்கும் வெற்றிப்பாடலாக அமையும்.
வசந்தபாலன் விருதுநகரைச் சேர்ந்தவர். விருதுகள் இவரைச் சேர்ந்தவை. நேற்றும், இன்றும் இனி வரும் நாளிலும்.
நீங்கள் சொன்னதுபோல் பாடல் வரிகள் மிக அழகு. நிச்சயம் எல்லோரும் முனுமுனுக்கும் வெற்றிப்பாடலாக அமையும்.
வசந்தபாலன் விருதுநகரைச் சேர்ந்தவர். விருதுகள் இவரைச் சேர்ந்தவை நேற்றும், இன்றும் இனி வரும் நாளிலும்.
நானும் அவரை புத்தக கண்காட்சியில் தான் பார்த்தேன். வெயில் படம் நல்ல படம் என்றாலும் யாரை கதை நாயகனாக காட்டுவது என்ற குழப்பம் படத்தில் இருக்கும். அதை தவிர்த்து இருக்கலாம். நீங்கள் சொன்ன வன்முறையை விட ஆரம்பம் மற்றும் முடிவு காட்சிகள் இயல்பான அந்த கதையோடு ஒட்டவில்லை. இப்படி எல்லாம் நாம் குறை சொன்னாலும், Commercial Value சேர்க்காமல் போயிருந்தால் ஒருவேளை படம் வெற்றிபெறாமல் போயிருக்கலாம், அப்போது இந்த படம் கண்டுகொள்ளப் படாமல் போயிருக்கும் அவரது "ஆல்பம்" போல். இனிமேல் அவர் இப்படிப்பட்ட குறைகளை தவிர்த்து நல்ல படங்களை தைரியமாக Commercial Value சேர்க்காமல் கொடுக்கலாம்.
பாடல் அருமையா வந்திருக்கு!
வசந்தபாலன் மேல் எனக்கு மரியாதை உண்டு! கண்டிப்பாக சிறப்பாக செய்திருப்பார் என நம்புகிறேன்!
அழகான பாடல் வரிகள்..
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி, விழாவில் கலந்து கொண்ட நிறைவை ஏற்படுத்தியது தங்கள் பதிவு.
நல்ல பகிர்வு...
‘அங்காடித் தெரு’ பாடல்கள் கேட்டேன். ’அவள் அப்படியொன்றும் பாடல்’ நிச்சயம் ஹிட்.
அவரது ‘ஆல்பம்’ படமே எனக்கு மிகப் பிடித்த படம்தான்(க்ளைமேக்ஸ் சொதப்பல் தவிர). ’நான் கடவுள்’ படத்திற்குப் பின் ஜெயமோகன் மீதான எதிர்பார்ப்பும் இப்படத்தில் அதிகமாகிவிட்டது.
வெய்ல் படம் ரிலீசான அன்னைக்கே பாத்தேன் பசுபதிக்காக அவர் நடிப்புக்காக.படமும் கதபண்டியவிதமும் ரொம்ப நல்லா இருந்துதுங்க.ஆனா பலபேர்(பத்திரிக்கைகள்ல) சொன்னாங்க இது சினிமா பேரடைஸோ படத்தோட கதைன்னு ஆனா அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல.என்னத்த சொல்ல
வெய்ல் நல்ல படம் வெற்றிப்படம் அதுபோலவே இதுவும் வெற்றிப்படமா அமையும் வசந்தபாலனுக்கு.
நா.முத்துக்குமார் அவரோட வரிகளப்பத்தி சொல்லவேணாம்.அட்டகாசமாத்தான் வந்திருக்கும்.
உங்க பதிவும் அருமை
பகிர்வுக்கு நன்றிங்க.
கார்த்திக் என்ற நண்பர் லிங்க் கொடுத்து 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'பாடல் கேட்டேன். பல்லவி மிகப் பிடித்தது.
பாலனின் அடுத்த படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்!
பகிர்விற்கு நன்றி.
வெற்றி பெற வாழ்த்துகள்.
அதிகம் பிடித்தவர்களை நான் தேவையற்று நெருங்குவதில்லை.///// ஒ.. இது தான் காரணமா..??
i shall listen to the song...thanks for this writing
இருக்காங்க அமித்தும்மா..பாடலை கேட்டுட்டு பதிவு போடுங்க, சரியா?
நன்றி நவாஸ்..உங்கள் வாழ்த்து பலிக்கும். விருதுகளையும் மக்களின் மனங்களையும் அள்ளிக் குவிக்கப் போகிறது அங்காடித் தெரு. முதல் வாழ்த்து நம்மிடமிருந்து..
உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி மணி.
அருண்,முத்துலெட்சுமி, பாஸ்டன் பாலா, யாத்ரா நன்றி,பாலா என்னோட வலைத்தளத்திற்கு வந்தது ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி
ஆமாம் தமிழ்ப்றவை (பறவையின் பெயர் வெகு அழகு) நன்றி தமிழ்நதி.மற்ற பாடல்களையும் கேளூங்கள், உங்களுக்குப் பிடிக்கும்..
//நா.முத்துக்குமார் அவரோட வரிகளப்பத்தி சொல்லவேணாம்.அட்டகாசமாத்தான் வந்திருக்கும்.//
நன்றி கார்த்தி. முத்துகுமார் rocks..
நன்றி வெயிலான். வண்ணத்துப்பூச்சி சூர்யா எப்படி இப்படியெல்லாம் கண்டுபிடிக்கறீங்க..ம்?
Thank you so much Dr.Rudran. I am following your writing thro your blog.
பாடல் வரிகள் மிக அருமை.
பாடல்களை இப்பொழுதுதான் கேட்டேன். நிரம்ப நாட்களுக்குப் பிறகு எல்லா பாடல்களும் சிறப்பான கேட்பனுவத்தைக் கொடுக்கும் படமாக இது உள்ளது. உண்மையில் ‘அவள் அப்படி ஒன்றும்’ தான் சுமாரான மெட்டு என்று சொல்வேன். மற்றவையெல்லாம் மிக அருமை. ‘அவள் அப்படி ஒன்றும் கலரில்லை’ என நா.முத்துக்குமார் எழுதியிருப்பது வருத்தம் கொடுக்கிறது. ’நிறமில்லை’ என்று கூட எழுதத்தெரியாதா? அதுவும் மெட்டுக்குள் அடங்கியே வந்திருக்கும். இசையமைப்பாளர், இயக்குநர், பாடகர் என அனைவரையும் தாண்டி இது எப்படி இடம் பெற்றது எனத்தெரியவில்லை. கவனக் குறைவா அல்லது தெரிந்தே எழுதியாதா?
கருத்துரையிடுக