வெள்ளி, 22 மே, 2009

சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறு


சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறுமுழுவதும் அடைத்திருந்தேன் என் யன்னலைஇரக்கமில்லாமல் இறுக்கிப் பிடித்துஆவேசத்துடன் பொழிந்து தள்ளியதுநேற்றிரவில் உன் மழை..

நினைவில் வை
நினைவில் வை உன்னை உனக்காக மட்டும்
நேசிக்கும் ஸ்நேகிதங்களில் நானொருத்தியென்று
இன்றுதான் கண்ணில்
தட்டுப்பட்டதுமீஜையின் மேல்முன்பு நீ பரிசளித்த
இறகின் நீல நிறம்...
கொடியில் இன்னும் உலராதிருக்கும்
என் ஆடைகள் காற்றில் ஆடியாடி
அசைகின்றனமழை நனைக்க விடுகிறேன் அவற்றை
இவ்விதமாய் பழகிய நட்பின்புறக்கணிப்பில் கழிந்த
வெறுமையான நாள்களைநிரப்புகிறேன்
மற்றுமொரு கவிதையாய்

என்னைப் பற்றிய உன் புரிதலை
என்னைப் பற்றிய உன் புரிதலை
யாருக்கும் உரத்துச்
சொல்லமாட்டாய் நீ,
எனக்கேயும் கூட..
பிரிவின் சொற்கள்
தொண்டைக்குள் சிக்கி
வெளிவர யத்தனிக்கின்றன..
மரணத்தையொத்த உன்
புறக்கணிப்பு அதை எஞ்சிவிடுகிறது
என்ன செய்ய?
உலகம் புறத்தே இருந்துவிட்டுப் போகட்டும்
உள்ளுக்குள் சொல்லிக்கொள்ளலாம்
ப்ரியங்களின் பரிபாஷைகளை
மண்டியிட்டுக் கேட்கிறேன்
சொற்களால் நிகழ்த்துவதை
இனி ஒருபோதும் செய்யத் துணியாதே
(உயிரோசையில் வெளியான கவிதைகள்...)

17 கருத்துரைகள்:

வால்பையன் சொன்னது…

எப்படி கவிதை எழுதுறதுன்னு எனக்கு க்ளாஸ் எடுக்க முடியுமா?

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

அன்பின் உமா,

உயிரோசையில் படித்து வியந்தேன். எனது மனநிலையை அப்படியே விவரிப்பன போலுள்ளன வரிகள். தொடருங்கள் தோழி !

மணிநரேன் சொன்னது…

//மரணத்தையொத்த உன்
புறக்கணிப்பு//

மனதினை ஊடுருவிய வலியினை சொல்லும் வார்த்தைகள்...

ஆதவா சொன்னது…

மூன்று கவிதைகளுமே மிகப்பிரமாதம். முதலாவதுதான் ஒரு ஃபார்மேஷன் இல்லாமல் ஒருமாதிரியா இருந்தது படிக்க... ஆனால் அதுதான் மூனிலும் டாப்.

வசந்த் ஆதிமூலம் சொன்னது…

அழகு.
புரிதல் அழகு.
ஸ்பரிசம் அழகு.
உன்னால் ஏற்பட்ட வெறுமையான நாளும் அழகு.
- வாழ்த்துகள் ஸகோ.

soorya சொன்னது…

நண்பிக்கு,
மூன்றாவது கவிதையின் இறுதி
மூன்று வரிகளும்
எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.

லதானந்த் சொன்னது…

அன்புள்ள சக்தி!
உங்கள் படைப்பு மிகவும் ரசிக்குபடி இருக்கிறது.

மணிமேகலா சொன்னது…

துன்பங்கள் பல வகையின தோழி. கடந்து செல்ல வேண்டிய பாதையோ நீண்டுகிடக்கிறது.

நிற்க நேரமின்றி நாட்கள் நகர்கின்றன.ஓடித்தான் ஆக வேண்டும்.

யாருக்கு யார் ஆறுதல்?

மனத் துயரை - அது கொள்ளும் வலியை-உணர்வுகளின் யுத்தத்தை சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது கவிதை.

ஆறுதலா வாழ்த்துக்களா தர?

நட்புடன் ஜமால் சொன்னது…

பொழிந்து தள்ளியதுநேற்றிரவில் உன் மழை..\\

நல்ல வெளிப்பாடு


\\உன்னை உனக்காக மட்டும் நேசிக்கும் ஸ்நேகிதங்களில் நானொருத்தியென்று\\

நல்ல ஸ்நேகம்


\\யாருக்கும் உரத்துச்
சொல்லமாட்டாய் நீ,
எனக்கேயும் கூட..\\

அருமை ...


\\யன்னலை\\
\\யத்தனிக்கின்றன\\
\\பரிபாஷைகளை\\

அழகு வார்த்தைகள்


\\\மண்டியிட்டுக் கேட்கிறேன்
சொற்களால் நிகழ்த்துவதை
இனி ஒருபோதும் செய்யத் துணியாதே\\

முழமையாக இரசிக்கவைத்தன

கே.ரவிஷங்கர் சொன்னது…

கவிதையெல்லாம் நல்லாயிருக்கு உமா.

மூன்று எதற்கு? கொஞ்சம் திகட்டுகிறது.வார்த்தை அலைன்மெண்ட் சரிபார்க்கவும்.

நம்மளுக்குக்த்தான் இது மாதிரி கவிதை வரமா டபாய்க்கிது.

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

\\\மண்டியிட்டுக் கேட்கிறேன்
சொற்களால் நிகழ்த்துவதை
இனி ஒருபோதும் செய்யத் துணியாதே\

ஆழமான நிகழ்வுகளை அழகாக சில வார்த்தைக்கோர்வைகளை மட்டும் வைத்து சொல்லிவிட்டுப்போய்விடுகிறீர்கள். மற்றவற்றையெல்லாம் படிப்போரின் கற்பனைக்கு விட்டுவிட்டு.

அருமை.

ஆதிமூலகிருஷ்ணன் சொன்னது…

சிறப்பான கவிதைகள். முதல் கவிதை பிரமிப்பு, ரசித்தேன்.!

(அலைன்மெண்ட், ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கின்றனவா?)

மயாதி சொன்னது…

உன் மௌனத்தைவிட
மரணம் எவ்வளவோ சந்தோசமானது .....
நீ
புறக்கணித்து தப்பிப்போகிறாய்
நான் செத்துப் போகிறேன்...


well keep it up....

vivek சொன்னது…

சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறு
இரக்கமில்லாமல் இறுக்கிப் பிடித்து
முழுவதும் அடைத்திருந்தேன் என் யன்னலை
ஆவேசத்துடன் பொழிந்து தள்ளியது மழை..

ippadiyum pakalamay ...

s.mani சொன்னது…

very nice poem!!!

vee.ramasamy.blogspot.com சொன்னது…

piriyankalin paripdsaiyai sorkallal nikakaltha mudiyathu entha vaarikal nalla eruuku

vee.ramasamy.blogspot.com சொன்னது…

piriyankalin paripdsaiyai sorkallal nikakaltha mudiyathu entha vaarikal nalla eruuku