
வெண் பாதங்கள் வெளித்தெரிய
கருமையுடலைச் சுருக்கி
உறைந்த ஓவியக் காட்சியாய்
உறங்கத் துடிக்கும் சின்னு..
பசித்தால்
மீம் மீம் என குரல் எழுப்பும்
வயிற்றுச் சுமையுடன்
மேலும் அசைவற்று தீனமான
சத்தத்துடன்
தன் இருப்பை உணர்த்தும்
நேற்றைக்கு முன் தினம்
காணாமல் போன அது
திசைகள் அறியாது.
என் வாசனை அதற்குத் தெரியும்
எனது வேதனையும் கூட..
பசியால் துடிக்கும் அதன் மென் குரல்
என்னை அதிரச் செய்கிறது.
எல்லா இடங்களிலும் தேடிக் களைத்து
காற்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
சின்னுவின் பாதங்களின் சுவட்டை
கண்டறிந்து சொல்லும் படி!
கருமையுடலைச் சுருக்கி
உறைந்த ஓவியக் காட்சியாய்
உறங்கத் துடிக்கும் சின்னு..
பசித்தால்
மீம் மீம் என குரல் எழுப்பும்
வயிற்றுச் சுமையுடன்
மேலும் அசைவற்று தீனமான
சத்தத்துடன்
தன் இருப்பை உணர்த்தும்
நேற்றைக்கு முன் தினம்
காணாமல் போன அது
திசைகள் அறியாது.
என் வாசனை அதற்குத் தெரியும்
எனது வேதனையும் கூட..
பசியால் துடிக்கும் அதன் மென் குரல்
என்னை அதிரச் செய்கிறது.
எல்லா இடங்களிலும் தேடிக் களைத்து
காற்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
சின்னுவின் பாதங்களின் சுவட்டை
கண்டறிந்து சொல்லும் படி!
நன்றி - ‘தடாகம்’ மின்னிதழ்
8 கருத்துரைகள்:
//காட்சியாய்ப்// ?
தோழிகள் இருவருக்குமே பூனைகள் பிடிக்கும் போல
நல்ல கவிதை !
தன் வாசனை உணர்கிற இன்னுயிர் தொலைந்து தேடும் தவிப்பு சொற்களில்
அழகாக வெளிபட்டிருக்கிறது...
உமா,
கவிதை நன்றாக இருக்கிறது.
‘சின்ட்ரெல்லா‘ என்ற வார்த்தை மட்டும் வாசிப்பில் பொருந்தாமல் நெருடுகிறது.
(3 வது வரியில் ‘காட்சியாய்ப்‘ என்றுள்ளது. ‘ப்‘ என்பதை நீக்கி சரி செய்து விடு)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
தொடர்ந்து எழுதுக.
நல்ல கவிதை தோழியே...!
நன்றி
நன்றி நேசன். எங்கள் இருவருக்கும் பூனை மிகவும் பிடிக்கும். எங்கள் பூனைகள் மிகவும் ப்ரியமானவை. எங்களைப் போலவே மென்மையும் அதே சமயத்தில் தேவையான இடங்களில் தேவையான விதத்தில் சீற்றமும் அடைபவை. தமிழின் பூனைக்குட்டி ஏதோ காரணத்தால் கோவித்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு போய்விட்டது. என்னுடைய பூனைக்குட்டி பக்கத்து வீட்டு Tom Catடுன் elope ஆகிவிட்டது. நாங்கள் வருத்தமாயிருக்கிறோம் என்று நிச்சயம் தெரியும் அவர்களுக்கு. சீக்கிரம் வீடு திரும்பி விடுவார்கள். உங்கள் பகிர்விற்கு நன்றி மித்ரன்.
சிண்டெரல்லா பூனைக்குட்டியின் பெயர். முதலில் நிலா என்று வைத்தேன். கருப்பு பூனைக்கு நிலாவெனப் பெயரா என வினோத் அப்பெயரை மறுத்தான். ராணிதான் அதற்கான சரியான பெயர் என்றான். அப்போது அது பூனை நடையில் எங்கள் காலுருகே வந்து மீயாம் என்றது. Fmல் ‘ஓ சென்யரீட்டா பேசும் மெழுகு பொம்மையே’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கவே, என்ன தோணியதோ நான் சின்டெரல்லா என்ற பெயரை அதற்கு அக்கணத்தில் வைத்துவிட்டேன். (சின்னு என்று சுருக்கி கூப்பிட ஆரம்பித்த கதை வேறு). உங்கள் கருத்துரைக்கு நன்றி வாசு. பிழையை சரி செய்து விடுகிறேன். ;)))
நன்றி சூர்யா. ;)))
உங்கள் மென் மனதை எடுத்துக்காட்டும் இந்த கவிதை நல்லா இருக்கு உமா
nalla irukku
கருத்துரையிடுக