
1)
வீட்டை விட்டு வெகுதூரம் வந்தபின்னும்
நினைவெல்லாம் சுட்டெரிக்கிறது
அவனது வசீகரமான அழைப்புக்கள்!
எப்போதுமே என் பெயர் சொல்லிக் கூப்பிடுவான்
அபூர்வமாய் அம்மாவென்றும் அழைப்பான்
அணைத்த கைகளின் கதகதப்பை
முகர்ந்து பார்க்கிறேன்
உறக்கத்திலிருந்து திடீரென விழித்து
எதை எதையோ வெறித்துப் பார்த்தபின்
கைசூப்பியபடி மீண்டும் ஆலிசின்
உலகிற்குச் சென்றுவிடுவான்
பகல் இரவு தெரியாது
வாரங்கள் மாதங்களின் சுமைகள் கிடையாது
அவனது உலகிற்குள்தான்
எத்தனை எத்தனை அதிசயங்கள்?
சிந்துபாத்தின்
சாகஸங்களைச் சொன்னால்தான்
ஒரு உருண்டைப் பருப்புச் சாதம்
உட்செல்லும்
இடையிடையே
”ஃபோன் எப்படி பேசுது
தண்டவாளத்தை யார் செஞ்சாங்க
எறும்பு மூச்சா எங்க போகும்
உதிர்ந்து கொண்டே இருக்கும்
முடிவில்லா அவனது கேள்விகள்
அவனைப் பார்க்க விழிகள் ஏங்கி
கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுகிறேன்
இப்படிப்பட்ட தண்டவாளத்தை
யார் செய்தார்கள் என்று யோசித்தபடி..


2)
வெகு தூரத்தில் இருந்து
ஊடுறுவிப் பார்க்கிறாய்
மிகப் பரிச்சியமான
என் சோகங்களின் நிழல்களை...
குரல்வளை இறுக்கப்படும் வேளை
வார்த்தையின்றி பரிதவிக்கிறாய்
உயிர்சிதைவு சிறிது சிறிதாய்
நடந்தேறும் தருணம்
எனக்கான கவிதையை
நீ எழுதத் துவங்குவாய்
எங்குமே சொல்லப்படாத
மயில் இறகு நேசம்
நீரில் அமிழ்த்தப்பட்டு
மூச்சுத் திணறிக் கிடக்கிறது
ஆயினும் சிநேகிதனே
இன்று மட்டும் பேசிவிடு
என் மென் குரலிற்கு உனக்கு
தெரிந்து வகையில் முத்தமிடு
நானும் மழையாகலாம்
(நன்றி - சாகித்ய அகெதமி நடத்திய கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகளை யுகமாயினி இதழில் பிரசுரித்த சித்தனுக்கு)
6 கருத்துரைகள்:
வாழ்த்துகள் உமாசக்தி
இரண்டு கவிதைகளும் மிக அருமை.
வாழ்த்துக்கள்!
நன்றி நேசமித்ரன்...
நன்றி ராமலஷ்மி...;))))
The second one's impact was direct.
It woke me up. But then....
"குரல்வளை இறுக்கப்படும் வேளை
வார்த்தையின்றி பரிதவிக்கிறாய்"
I am still afraid. As Vikramaadhithyan said in the recent Ananda Vikatan: "Naan oru saathaaranamaanavan".
Till today I am only watching as you said "வெகு தூரத்தில் இருந்து
ஊடுறுவிப் பார்க்கிறாய்
மிகப் பரிச்சியமான
என் சோகங்களின் நிழல்களை..."
The poem is realistic and direct.
தண்டவாளம் பற்றி என் நண்பர்கள் ...
வியக்க மறந்ததேயில்லை.
1 . தண்டவாள சோகத்தை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி .................(கலாப்ரியா)
2 . நானும் நம்பியும் (விக்ரமாதித்தியன்) கள் மயக்கத்தில் அருகருகே படுத்தபடி தென்காசித் தண்டவாளம் இதுதானோ என்று வியந்திருக்கிறோம்..பாரதியை நினைத்தபடி .
இப்போ நீயும் வியக்கிறாய்.....
இனி தமிழுக்கு நல்ல காதற் கவிகள் கிடைக்குமென நம்பலாம்.
Sickening moment ல் என்னுடைய மொபைலில் எழுதி வைத்த வரிகள் அவை. கவிதையாக எழுதிய போது ஏதோ ஒன்று குறைவதாக இன்னும் தோன்றுகிறது. Thank You very much for your comment and encouragement Dhanaraj ;)))
நன்றி சூரியா...நம்பி உங்களுக்கு நண்பரா? அவர் என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த கவிஞர் / நண்பர். ஊருக்கு சென்றால் அவரைப் பார்க்காமல் இருக்க மாட்டார். ஒரு முறை இருவரும் குற்றாலத்திற்கு சென்ற போது,என் அப்பா இந்த அருவியைப் பற்றிய கவிதை எதாவது சொல்லுங்கள் என்றதும் மடை திறந்த வெள்ளம் போல நம்பி கவிதை சொன்னாராம். அப்பா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த தருணம் என்று அடிக்கடி என்னிடம் சொல்வார்கள்..
பகிர்விற்கு நன்றி சூர்யா :)))
கருத்துரையிடுக