வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஹாப்பி நியூ இயர் 2011








எப்போதும் கேட்டுச் சலித்த வாசகம் இந்த வருஷம் ரொம்ப வேகமா ஓடிருச்சு! எதை எதையோ துரத்திக் கொண்டு நாம்தான் மூச்சிரைக்க ஓடிக் கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டம் சற்று நிற்கையில் வாழ்க்கை எங்கோ விலகிக் கிடக்கும். ஆனாலும் வேறு வழியில்லை ஓடித் தான் ஆக வேண்டும், கொஞ்சம் பணத்திற்காகவும், நிறைய புகழுக்காகவும், மேலும் சில வாழும் கணங்களுக்காகவும்....



இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று நான் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னை சகித்துக் கொண்டு, என் அலைக்கழிப்பை எல்லாம் உடனிருந்து பார்த்து செய்வதற்கு ஏதுமின்றி ஆனால் என்னை புரிந்து கொண்டு என்னுடன் எப்போதும் இருக்கும் என் சராவுக்கு,



அம்மா எதோ படிக்கறாங்க, நிறைய எழதறாங்க என்று அவர்களின் சின்னஞ் சிறு மனதின் புரிதலுக்கும், அலுக்காமல் சலிக்காமல் வீட்டை காப்பாற்றி வரும் என் அம்மாவுக்கும், சராவின் அம்மாவுக்கும், நன்றி சொல்வது சிறுசெயல். தினமும் காலையில் குறுஞ்செய்தி அனுப்பும் என் பிரியமான தம்பி சரவணனன் (தம்பியின் பெயரும் சரவணன், சரவணன்களால் ஆனது எனது உலகம்), தினந்தோறும் நெல்லையிலிருந்து போனில் நலம் விசாரிக்கும் இனிய நண்பர் தங்கராஜ், என் பிரியமான சந்திரா, தமிழ்நதி, பாஸ்கர், பாஸ்கர் மனைவி ஈஸ்வரி, ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி சமயத்தில் சந்திக்கும் கவிஞர் இளையபாரதி, சிறுவயது முதல் என் உடன் வெற்றித் தோல்விகளில் என் கரம் பிடித்து என்னை ஆற்றுப்படுத்திய உயிர்த் தோழி கீதாவுக்கும், ஷியாமுக்கும், பாபுவிற்கும் எப்படி நன்றி சொல்வது? வாழ்த்தும் நன்றிகளும் நிறைந்து கொண்டே இருக்கிறது முடியப் போகும் இந்நாளைப் போலவே....



”அடங்குநாள் இல்லாதமர்ந்தானைக் காணற்கே
தொடங்கு நாள் நல்லதன் றோ- நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ.

வல்லவா றெல்லாம் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணியநாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள்.

காலங்கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
( திருஅருட்பா)




அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

3 கருத்துரைகள்:

நேசமித்ரன் சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

இராயர் சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Dhanaraj சொன்னது…

Happy New Year.
Let humanism and hope survive in 2011.