
அது
ஆள் அரவமற்ற
ஒரு ரயில் நிலையம் என்றாய்...
இருக்கும்
அதனால்தான்
ஒரு குயில் அபூர்வமாகக்
குர லெழுப்பியதையும் ,
பயணிகளுக்கான அறிவிப்பு
ஒலித்ததையும்
துல்லியமாக உணர்ந்தேன் .
சிவப்பும்,பச்சையுமாய்
வர்ண விளக்குகள் மாறி மாறி
ஒளிர்வதையும்
ரயிலின் பெரு மூச்சுகளையுங் கூட
உணர்கின்றேன் ...
வேண்டுமென்றே தவற விட்டு
அடுத்த ரயிலுக்காய்க்
காத்திருக்கிறாய்...
இரண்டு ரயில்களுக்கான
இடைவெளி நேரத்தில்
நாம் எதைப் பேசி முடிக்க இயலும் ?
வெயிலின் சாய்வை
சிறு நூல் கொண்டு இழுத்து,
நிமிர்த்துவது போல
பிரிவின் பிரிவை ஒத்திவைக்க
இப்படித்தான் மண்டியிடுகின்றோம் .
ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டதாக
இறுதியில் சொல்லுகிறாய்.
உனக்குத் தெரியாது,
உன்னருகில் நானும் பயணிப்பது.
(விகடன் தீபாவளி மலர் 2011 வெளிவந்த கவிதை)
25 கருத்துரைகள்:
அந்த மலரில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. தொடர்ந்து எழுதுங்கள் உமா.
அந்த மலரில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. தொடர்ந்து எழுதுங்கள் உமா.
கவிதை அருமை! வாழ்த்துக்கள் உமா சக்தி! என் வலைப்பதிவிற்கும் வருகை தாருங்கள். http://kavipriyanletters.blogspot.com/
கவிதை அருமை! வாழ்த்துக்கள் உமா சக்தி! என் வலைப்பதிவிற்கும் வருகை தாருங்கள். http://kavipriyanletters.blogspot.com/
வெயிலின் சாய்வை
சிறு நூல் கொண்டு இழுத்து,
நிமிர்த்துவது போல
பிரிவின் பிரிவை ஒத்திவைக்க
இப்படித்தான் மண்டியிடுகின்றோம் .]]
நிதர்சணம், இப்படியாக பலமுறை உணர்ந்ததுண்டு அவளுடனான இணைய உரையாடலிலும், முற்று பெற்றுவிடுமே என்ற எண்ணமே அடுத்து எதையும் யோசிக்க விடாமல் செய்துவிடுகின்றது ...
உனக்குத் தெரியாது,
உன்னருகில் நானும் பயணிப்பது.]]
காதல், அக்கறை ...
ரொம்ப நல்லாருக்குங்க.. :) உமா
நல்லாயிருக்குங்க.
இரயில் நிலைய உணர்வுகள் அருமையாக வெளிப்படுகிறது தங்களது கவிதையில் வாழ்த்துக்கள்
http://devarajvittalan.blogspot.com/
மிகவும் அருமை...வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்
மிகவும் அருமை...வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்
வெயிலின் சாய்வை
சிறு நூல் கொண்டு இழுத்து,
நிமிர்த்துவது போல
பிரிவின் பிரிவை ஒத்திவைக்க
இப்படித்தான் மண்டியிடுகின்றோம்.
++
ஆழமான சிந்தனை !
அழகான கற்பனை !
வாழ்த்துக்கள் !
உங்கள் கவிதைகள் எளிமையின் பேரழகைச் சூடிக் கொள்கின்றன.அதனால் சிறப்படைகின்றன. வாழ்த்துக்கள்.
நன்றி உமா....உங்கள் ஆசிர்வாதத்தில் நிச்சயம் எழுதுகிறேன்
நன்றி கவிப்ரியன். உங்கள் பதிவுகளை நிச்சயம் படிக்கிறேன்
நன்றி ஜமால், தேவராஜ் விட்டலன். முத்துலெட்சுமி,திருமயிலை எங்க ஊரு,ஜெயமோகன் அண்ட் அமீர் அப்பாஸ்..வெகு நாள் கழித்து பரவலாக இந்தக் கவிதை கவனம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி....
very good uma romba nalla irukku enrum anbudan babu
ரொம்ப நல்லா இருக்கு உமா. கவித்துவமும் எளிமையும் இணையும் கவிதை.
மிக அருமையாக வருகிறது உமா. முதல் ரயிலுக்கும் மூன்றாவது ரயிலுக்கும் இடைப் பட்ட நேரத்தில் எத்தனைக் கொளுத்திப் போடலாம் தெரியுமா உமா?
அருமை
pirivin pirivai oththivaikka.... arumai!
very nice ...
வெயிலின் சாய்வை
சிறுநூல் கொண்டிழுத்து
நிமி்ர்த்துவது போல..
அற்புதமான உவமை...
வாழ்த்துக்கள்.
தீபிகா.
http://theepikatamil.blogspot.com/
அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
// அதனால்தான்
ஒரு குயில் அபூர்வமாகக்
குரலெழுப்பியதையும் ,
பயணிகளுக்கான அறிவிப்பு
ஒலித்ததையும்
துல்லியமாக உணர்ந்தேன் //
மனம் கவர்ந்த வரிகள்!
தியானத்திலிருக்கையில் இப்படி அவதானிக்கலாம் இல்லையா!
வாழ்த்துக்கள் மேடம்!
வாழ்த்திய நண்பர்களுக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக